தந்தை செல்வாவின் 41 ஆவது நினைவு தினம் யாழ்ப்பாண நகரில் அமைத்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

தந்தை செல்வா நினைவு தூபிக்கு தந்தை செல்வா அறக்காவலர் சபையின் தலைவர், தந்தை செல்வாவின் புதல்வர், யாழ்.மாநகர முதல்வர், நாடாளுமன்ற உறுப்பின்கள் மலர் மாலை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து தந்தை செல்வா நினைவுச் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.