முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் பிர­தேச சபை­யில், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை தோற்­க­டித்து, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைத்­தது. கூட்­ட­மைப்­பின் சார்­பில் தவி­சா­ளரா அம்­ப­ல­வா­ணர் அமிர்தலிங்­க­மும், உப­த­வி­சா­ள­ராக தங்­க­வேல் சிவ­கு­மா­ரும் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

துணுக்­காய் பிர­தேச சபை­யின் தவி­சா­ளர் மற்­றும் உப­த­வி­சா­ள­ரைத் தெரிவு செய்­வ­தற்­காக அமர்­வு­கள் நேற்­றுப் பிர­தேச சபை மாநாட்டு மண்­ட­பத்­தில் வடக்கு மாகாண உள்­ளூ­ராட்சி ஆணை­யா­ளர் ம.பற்­றிக் டிறஞ்­சன் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

தமிழ்த் தேசி­யக் கூட்;டமைப்­பின் 6 உறுப்­பி­னர்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 3 உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 2 உறுப்­பி­னர்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி மற்­றும் ஈ.பி.டி.பி. கட்­சி­க­ளின் தலா ஒவ்­வொரு உறுப்­பி­னர்­க­ளு­மாக 13 பேரும் கூட்ட அமர்­வில் கலந்து கொண்­ட­னர்.

தவி­சா­ளர் தெரிவு
தவி­சா­ளர் பத­விக்­குப் பெயர்­களை பிரே­ரிக்­கு­மாறு ஆணை­யா­ளர் கோரி­னார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் அம்­ப­ல­வா­ணர் அமிர்­த­லிங்­கத்­தின் பெயரை, அந்­தக் கட்­சி­யின் க.நிரூ­பன் முன்­மொ­ழிந்­தார். அதே கட்­சி­யின் உறுப்­பி­னர் ப.வினோத் வழி­மொ­ழிந்­தார்.

அவரை எதிர்த்து சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர் பெரு­மாள் நடே­சனை, ஐக்­கிய தேசி­யக் கட்சி உறுப்­பி­னர் உ.பார்­தீ­பன் முன்­மொ­ழிந்­தார். அதே கட்­சி­யின் புவ­னேஸ்­வ­ரனி பால­சுப்­பி­ர­ம­ணி­யம் வழி­மொ­ழிந்­தார். உறுப்­பி­னர்­கள் 13 பேரும் பகி­ரங்க வாக்­கெ­டுப்­பையே கோரி­னர்.

கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­பட்ட அ.அமிர்­த­லிங்­கத்­துக்கு 7 வாக்­கு­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் சார்­பில் நிறுத்­தப்­பட்ட பெ.நடே­ச­னுக்கு 6 வாக்­கு­க­ளும் கிடைத்­தது.

கூட்­ட­மைப்­பின் 6 உறுப்­பி­னர்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி­யின் ஒரு உறுப்­பி­ன­ரு­மாக 7 பேர், கூட்­ட­மைப்­பின் உறுப்­பி­னர் அ.அமிர்­த­லிங்­கத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­த­னர். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­ன­ருக்கு ஆத­ர­வாக, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் 3 உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 2 உறுப்­பி­னர்­க­ளும், ஈ.பி.டி.பி.யின் ஒரு உறுப்­பி­ன­ரு­மாக 6 பேர் வாக்­க­ளித்­த­னர். தவி­சா­ள­ராக கூட்­ட­மைப்­பின் அமிர்­த­லிங்­கம் தெரி­வா­னார்.

உப­த­வி­சா­ளர் தெரிவு
தவி­சா­ளர் தலை­மை­யில் உப­த­வி­சா­ளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் தங்­க­வேல் சிவ­கு­மாரை, அந்­தக் கட்­சி­யின் வீ.இரா­ச­ரட்­ணம் முன்­மொ­ழிய, புவ­னேஸ்­வரி முத்­துத்­தம்பி வழி­மொ­ழிந்­தார். அவரை எதிர்த்து ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் சார்­பில், உ.பார்­தீ­பனை, அந்­தக் கட்­சி­யின் உறுப்­பி­னர் க.சகுந்­த­லா­தேவி முன்­மொ­ழிய, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர் அன்­டன் ஜஸ்­டின் அனோ­ஜன் வழி­மொ­ழிந்­தார்.
உறுப்­பி­னர்­கள் பகி­ரங்க வாக்­கெ­டுப்­பையே கோரி­னர்.

கூட்­ட­மைப்பு உறுப்­பி­ன­ருக்கு 7 வாக்­கு­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சி உறுப்­பி­ன­ருக்கு 6 வாக்­கு­க­ளும் கிடைக்­கப் பெற்­றது. உப­த­வி­சா­ள­ராக கூட்­ட­மைப்­பின் த.சிவ­கு­மார் தெரிவு செய்­யப்­பட்­டார்.