மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேசசபையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம்

இதற்கமைய பிரதேசசபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோகநாதன் ரஜனி தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைகளின் தலைவர் மற்றும் பிரதி தலைவர்கள் தெரிவு செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைய, போரதீவுப்பற்று பிரதேசசபைக்கான தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவுகள் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகள் திறந்த முறையில் நடைபெற்றன.

வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட யோகநாதன் ரஜனிக்கு 9 வாக்குகளை பெற்று தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி தவிசாளராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட நாராயணபிள்ளை தருமலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Source:https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-get-Poratheevu-pradesha-shabava