இயேசு கிறிஸ்­துவின் சிலுவை மர­ணத்­தி­னையும் உயிர்த்­தெ­ழு­த­லையும் உல­கெங்­கு­முள்ள கிறிஸ்­த­வர்கள் நினை­வு­கூரும் இத்­த­ரு­ணத்தில் இலங்கை வாழ் கிறிஸ்­தவ சமூ­கத்­தி­ன­ருக்கு எனது உயிர்த்த ஞாயிறு தின வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக்­கொள்­கிறேன் என எதிர்­க்கட்­சித்­த­லைவர் சம்­பந்தன் தனது உயிர்த்த ஞாயிறு வாழ்த்­துச்­செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள செய்­தியில் இயேசு கிறிஸ்­துவின் சுய­ந­ல­மற்ற  தாழ்­மை­யான தியாகம் நிறைந்த வாழ்க்­கை­யா­னது எல்லா மனி­தர்­களும் சம­மா­கவும் சுய­ம­ரி­யா­தை­யு­டனும் நடத்­தப்­பட வேண்டும் என மனி­த­கு­லத்­திற்கு சவால் விடு­கின்ற ஒன்­றாக  காணப்­ப­டு­கின்­றது.

எதிர்­பார்ப்பு, புதிய வாழ்க்கை, மன­து­ருக்கம் என்­ப­வற்­றினை பிர­தி­ப­லிக்கும் உயிர்த்த ஞாயிறை கொண்­டாடும் நாம் பன்­மு­கத்­தன்­மை­யையும் சமத்­து­வத்­தி­னையும் பேணும் ஒரு நாட்­டினை கட்­டி­யெ­ழுப்பும் முக­மாக உயிர்த்த ஞாயிற்றின் பண்­பு­களைக் கடைப்­பி­டித்து வாழ முன்­வ­ரு­வோ­மாக.

மேலும் உயிர்த்த ஞாயி­றா­னது குறு­கிய காலத்தில் ஏற்­படும் சவால்­களைக் கண்டு நாம் மனந்­த­ளர்ந்து போகாமல் உன்­ன­த­மான வெற்­றி­யினை அடையும் நோக்கில் நம்­பிக்­கை­யோடும் உறு­தி­யோடும் இருக்க வேண்டும் என்­ப­த­னையும் எமக்கு நினை­வூட்டி நிற்­கின்­றது.

இப்­பு­னித தினத்­தைக் கொண்­டாடும் இத்­த­ரு­ணத்தில்  குறைந்த வச­தி­க­ளோ­டுள்ள மக்களுக்கும் சமூகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மக்களுக்கும் எமது கரங்களை நீட்டுவதன் மூலம் உயிர்த்த ஞாயிறினை அர்த்தமுள்ள ஒன்றாகக் கொண்டாடுவோமாக.

http://www.virakesari.lk/category/local?page=4