நோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (7.01.2016) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் மிதமான அரசியல் நகர்விற்கு தனது பாராட்டுதலை தெரிவித்ததோடு, மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், தமிழ் மக்கள் ஒன்றாக செயற்ப்படுவதன் மூலமே ஒரு சரியான தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.