வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குற்றத்திற்குப் பொறுப்பானவர்களை நீதிக்கு முன்பாக நிறுத்தி அதற்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் போதே இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலைபெற்றுள்ளதாக கூறமுடிமே தவிர வெறுமனே அதுதொடர்பான சட்டத்தை நிறைவேற்றமை காரணமாக நாட்டில் சட்டத்தின் ஆட்சி இருப்பதாக பறைசாற்ற முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வலுக்காட்டாயமாக காணமல் ஆக்கப்படுதலில் ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்டதையடுத்து ஆற்றிய உரையின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாடாமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்ததாவது; “இந்த நாட்டில் காணாமல் போனோர் விவகாரம் நீண்ட வரலாற்றைக்கொண்டது. இந்தக்குற்றமானது படுகொலையிலும் பார்க்க பாரதூரமானது. ஏனெனில் படுகொலைக்குள்ளான ஒருவரின் உறவினருக்கும் அவருக்கு நேர்ந்த கதி என்ன என்பது தெரியும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் அது தெரியாது. அவர்கள் தமது அன்புக்குரியவர் மீண்டும் வருவார் என்ற தொடர்ச்சியான எதிர்பார்ப்பிலேயே வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவலநிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.” என சுட்டிக்காட்டினார்.

 

வலுக்காட்டாயமாக காணமல் ஆக்கப்படுதலில் ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் 37 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் ​ புதன்கிழமை மாலை நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக 53 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக 16 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 37 மேலதிக வாக்குகளால் வலுக்காட்டாயமாக காணமல் ஆக்கப்படுதலில் ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த சட்மூலமானது தமது உறவுகளை இழந்தவர்களுக்கான தீர்வை வழங்க கூடியவகையில் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தது.

இந்த சட்டமூலத்தில் மேலும் சில திருத்தங்கள் உள்வாங்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்மமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்  புதன்கிழமை பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போது தெரிவித்திருந்தனர்

 

http://www.newsuthanthiran.com/2018/03/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/