திருகோணமலை மாவட்டம், பட்டணம் , மற்றும் பட்டணமும் சூழலும் உள்ளடங்கலான பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் சிங்கப்பூர் நகர திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நிறுவனமான சூர்பன ஜூரோங் பிரதிநிதிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தலைமையில் இன்று (07.03.2018)  காலை அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்கள் கலந்து கொண்டு மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இடம்பெற வேண்டிய மிக முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் குழுவினருக்கு விளக்கமளித்தார்.