பாராளுமன்ற எதிர்க்கட்சி பதவியை மஹிந்த ராஜபக் ஷவிற்கு வழங்க முடியாது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  நிலையில் எதிர்க்கட்சி பதவியை தட்டிப்பறிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மஹிந்த ராஜபக் ஷவும் அவரது அணியும் தனித்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்தினால் அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து பார்க்கலாம் எனவும் கூறியது.

 

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அதிக வாக்குகளை பெற்றுள்ள நிலையில் அவர்களுக்கு எதிர்க்கட்சி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறுகையில், ஜனநாயக ரீதியில் சிந்தித்தால் இப்போதுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ  பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரை பிரதான எதிர்க்கட்சியாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந் நிலையில் தற்போதைய எதிர்க்கட்சியாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை வினவிய போதே கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பாரளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைபாட்டினை தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/article/30753