புது வருட வாழ்த்துச் செய்தி

புதிய எதிர்பார்ப்புக்களை கொண்டு வந்திருக்கும் இந்த புதிய வருடத்தில் இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.
இன்னுமொரு புதிய வருடத்தை வரவேற்கும் இத்தருணத்தில் இலங்கை வாழ் பல்லின சமூகங்கள் தமது வேறுபாடுகளை களைந்து, மக்களின் உரிமைகளையும் மனித நேயத்தையும், சுதந்திரத்தையும், நல்வாழ்வையும் மதித்து பாதுகாக்கின்ற பிளவுபடாத ஒன்றுபட்ட ஒரு நாட்டை கட்டியெளுப்ப முன் வரவேண்டும் என அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.
தேசிய பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை அடைதல், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தல், நிலையான சமாதானத்தையும், புரிந்துணர்வையும் நிலைநாட்டல் போன்ற இமாலய பணிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளும் இந்த பணிகளை முன்னெடுப்பதற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி 2016ம் ஆண்டை எமது நாட்டின் வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத சிறப்பான ஆண்டாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு நாட்டின் பல்லின மக்களின் இன, மொழி, சமய கலாச்சார மற்றும் ஏனைய தனித்துவமான பண்புகளை மதிப்பதன் மூலம் ஏற்ப்படுகின்ற ஒற்றுமையை பேணுவதன் மூலமே ஒரு வளம்மிக்க நாட்டை கட்டியெழுப்ப முடியும். எனவே இந்நாட்டின் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக செயற்ப்படுவதன் மூலம் ஒரு சிறப்பான நாட்டை எமது எதிர்கால சந்ததியினருக்காக கட்டியெளுப்ப முன் வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன்

இரா. சம்பந்தன்
எதிர்க் கட்சி தலைவர்
தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு