நேற்றைய தினம் வலி வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே இராணுவத்தினர் வசமிருந்த 701 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களின் மீள் குடியேற்றத்திர்க்கென அரசாங்கம் விடுவித்துள்ளமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கிறது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவர் யாழ் குடா நாட்டிற்கு விஜயம் செய்து விடுவிக்கப்படாத காணிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு உடனடியாக விடுவிக்கப்பட கூடிய பகுதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வேளை அக்கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் முதற்கட்டமாக இந்த வருட இறுதிக்குள் ஒரு பகுதியில் மக்கள் மீள்குடியேற்றத்திர்கென அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதை குறித்து ஜனாதிபதிக்கு எமது நன்றியை தெரிவித்து கொள்ளும் அதேவேளை மிகுதி பகுதிகளும் கட்டம் கட்டமாகவேனும் கூடிய விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

இதைப்போலவே மலரும் இந்த புதிய வருடத்தின் ஆரம்பத்திலே எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.