முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தம்வசமுள்ள மீதமுள்ள காணிகளை விடுப்பதற்கு இராணுவம் இணங்காது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின்போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவில் 133 ஏக்கர் மக்களின் காணிகள் நேற்று முன்தினம் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவித்த சுமந்திரன், “விடுவிக்கவே மாட்டோம் என்று கூறிய காணிகளே தற்போது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எனினும் மீதமுள்ள காணிகளை விடுப்பிதற்கு இராணுவம் இணங்காது. அதற்காக நாம் அப்படியே இருக்க முடியாது. மக்கள் உள்ளே நுழைந்து இராணுவம் தாமாக வெளியேறும் நிலமையை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காணி விடுவிப்பில் நாம் என்ன செய்கின்றோம் என்ன செய்திருக்கின்றோம் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

http://athavannews.com/?p=596308-