தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்து போட்­டி­யி­டு­வ­தாக இருந்தால் சுதந்­தி­ர­மாக வெளியில் போய் கேட்­கலாம். இதே­போன்று வேறு கட்­சிகள் கூட்­ட­மைப்பில் சேர்ந்து போட்­டி­யிடப் போகிறோம் என்று கேட்டால் அத­னையும் சாத­க­மாகப் பரி­சீ­லித்து உள்­வாங்­குவோம் என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

 

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது அலு­வ­ல­கத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பின் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் யார் இருக்­கி­றார்கள் யார் இல்­லா­துள்­ளார்கள்  என்­பது தெரி­யா­துள்­ளது. காரணம் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு  ஆரம்­பித்­த­போது தமிழர் விடு­தலைக் கூட்­டணி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ், தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஆகிய மூன்றும் கைச்­சாத்­திட்டு கூட்­ட­மைப்பு   ஆரம்­பிக்­கப்­பட்­டது. கைச்­சா­த்தி­டப்­பட்ட ஆவ­ணத்தில் இந்த மூன்று கட­்சி­களும் தான்  கைச்­சாத்­திட்­டுள்­ளன.

தற்­போது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பில் இருக்­கி­ற­தாக நாங்கள் கூறு­கின்ற இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியோ, புௌாட் அமைப்போ உள்ளே இருக்­க­வில்லை. ஆரம்­பத்தில்  இருந்த தமிழர் விடு­தலைக் கூட்­டணி மாகா­ண­சபைத் தேர்­தலின் போது உள்ளே இருந்­தது தற்­போது இல்­லா­தது போல் தெரி­கின்­றது. ஆரம்­பத்தில் உள்ளே இருந்த அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் இப்­போது உள்ளே இல்லை என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது. அப்­படிப் பார்க்கும் போது தமி­ழீழ விடு­தலை இயக்கம் ஒன்­றுதான் ஆரம்­பத்­திலும் இருந்­தது இப்­போதும் இருக்­கின்­றது.

மஹிந்த ராஜபக் ஷ ஒரு­த­டவை சொன்­னது போல தங்­க­ளு­டைய கட்சி சலூன் கதவு போல யாரும் வரலாம் யாரும் போகலாம். அது மாதி­ரித்தான் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பும் இருக்­கி­றது போல தென்­ப­டு­கின்­றது. ஆகையால் தேர்­தலின் போது தனியே சென்று கேட்­ப­தற்கு  யாருக்கும் பூரண சுதந்­திரம் இருக்­கி­றது.  வலுக்­கட்­டா­ய­மாக பிடித்து யாரையும் அமர்த்­த­மாட்டோம்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் இருக்­கின்ற கட்­சிகள் கூட்­ட­மைப்­பாக இல்­லாது தனித்துக் கேட்பதாக இருந்தால் சுதந்திரமாக வெளியில் போய் கேட்கலாம். அல்லது வேறு கட்சிகள் கூட்டமைப்பில் சேர்ந்து போட்டியிடப் போகிறோம் என்று கேட்டால் அதனையும் சாதகமாகப் பரிசீலித்து உள்வாங்குவோம் என்றார்.

 

http://www.virakesari.lk/article/26631