சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட முடி­யாது. சுரே­ஷுடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தற்கு தயா­ர­ாகவே உள்ளேன். இவ்­வி­டயம் குறித்து அடுத்த கட்ட நட­வ­டிக்கைகள் விரைவில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான வகி­பா­கத்­தினைக் கொண்­டி­ருக் கும் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சி­யா­னது ஏதேச்­ச­தி­கா­ர­மாக தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் அக்­கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என கூட்­ட­மைப்பின் ஸ்தாபக பங்­கா­ளிக்­கட்­சி­களில் ஒன்­றான ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அறி­வித்­துள்­ளமை, மற்றும் அக்­கட்­சியின் செய­லா­ளரும் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சிவ­சக்தி ஆனந்­த­னுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக நடை­பெற்று வரும் விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­வ­தற்­கான நேரம் மறுக்­கப்­பட்­டமை உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னிடம் வின­வி­ய­போது அவற்­றுக்­குப்­ப­தி­ல­ளி­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தெரி­வித்த கருத்­துக்கள் வரு­மாறு,

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது நான்கு கட்­சி­க­ளைக்­கொண்ட ஜன­நாயக் கட்­ட­மைப்­பாகும். அதில் பங்­கு­பற்­றி­யுள்ள கட்­சிகள் வெவ்­வேறு பட்ட விட­யங்­களில் வெவ்­வே­று­பட்ட கருத்­துக்­களை நிலைப்­பா­டு­களை கொண்­டி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை. குறிப்­பாக தமி­ழ­ர­சுக்­கட்சி தொடர்­பாக ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஈ.பி.ஆர்.எல்.எப் தொடர்­பாக தமி­ழ­ர­சுக்­கட்சி உள்­ளிட்ட ஏனைய கட்­சி­களும் ஒவ்­வொரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்க முடியும்.

அது எவ்­வாறு இருந்­தாலும் கூட்­ட­மைப்­பா­கவே அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­டு­கின்­றன. அந்த வகையில் சுரேஸ் பிரே­ம­சந்­திரன் சில கருத்­துக்­களை வௌியிட்­டுள்ளார். நாம் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக பிள­வ­டைந்து விட­மு­டி­யாது. பிரிந்து நிற்­க­மு­டி­யாது. தற்­போது ஒரு முக்­கி­ய­மான தருணம். இதில் எமக்குள் முரண்­பட்டு நிற்க முடி­யாது. கூட்­ட­மைப்பி்ன் தலைவர் என்ற வகையில் நான் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ர­னுடன் இணைந்து பய­ணிப்­பதை மறுக்­க­வில்லை. அவ­ருடன் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கும், ஒருங்­கி­ணைந்த பய­ணத்­திற்கும் தயா­ரா­கவே உள்ளேன்.

அதில் எனக்கு எந்­தப்­பி­ரச்­சி­னையும் கிடை­யாது. இந்த விட­யத்தில் கலந்­து­ரை­யா­டல்­களை செய்­வ­தற்கும் நான் பின்­னிற்­க­வில்லை. இந்த முக்­கிய விட­யங்கள் தொடர்­பாக விரைவில் அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. அது­கு­றித்த அறி­விப்­புக்கள் விரைவில் வௌியாகும். ஏனைய கட்­சி­க­ளு­டனும் பேச­வுள்ளேன்.

எனது தனிப்­பட்ட முடிவு அல்ல

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தௌிவு­ப­டுத்தும் இரு நாள் கருத்­த­ரங்கு ஒன்றை நாங்கள் பாரா­ளு­மன்றக் குழுவின் அங்­கத்­த­வர்­க­ளுக்­காக நடத்­தினோம். இதில் சட்­டத்­துறை சார்ந்த நிபு­ணர்­களை வர­வ­ழைத்து இடைக்­கால அறிக்­கையில் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த விட­யங்கள் தொடர்­பான உறுப்­பி­னர்­க­ளுக்கு காணப்­பட்ட சந்­தே­கங்கள், தற்­போ­துள்ள அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளி­லி­ருந்து எவ்­வாறு வேறு­ப­டு­கின்­றன, அதனால் ஏற்­ப­டு­கின்ற நன்­மைகள் எவை, தீமைகள் எவை, புதிய அர­சி­ய­மைப்­புக்­கான இறுதி வரை­வொன்று தயா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­போது எவ்­வா­றான விட­யங்கள் மேலும் மேம்­ப­டுத்த வேண்டும் போன்ற பல்­வேறு விட­யங்கள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்­டி­ருந்தோம். இந்தக் கருத்­த­ரங்கில் பங்­கேற்­ப­தற்­ப­தற்கு சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி வருகை தந்­தி­ருக்­க­வில்லை.

மேற்­படி கருத்­த­ரங்கின் இறு­தியில் பாரா­ளு­மன்றக் குழுவின் அங்­கத்­த­வர்கள் அனை­வரும் ஏகோ­பித்து இக்­க­ருத்­த­ரங்கில் பங்­கேற்­க­த­வர்­களை இடைக்­கால அறிக்கை மீதான விவாத்தில் உரை­யாற்­று­வ­தற்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்ற முடி­வினை எட்­டி­னார்கள். அது எனது தனிப்­பட்ட முடி­வல்ல. அந்த முடிவின் பிர­காரம் தான் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. இதனை நாம் அர­சி­ய­ல­மைப்புச் சபைத் தலைவர் கரு ஜய­சூ­ரி­யவின் செய­லா­ள­ரி­டத்தில் எனது செய­லாளர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆத­ர­வாக பேசு­மாறு வலி­யு­றுத்­த­வில்லை

மேலும் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தில் அனைத்து உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வாக பேச வேண்டும் என்று நாம் யாரையும் வலி­யு­றுத்­த­வில்லை. அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்­க­வில்லை. அனை­வரும் தமது நிலை­பா­டு­களை பிர­தி­ப­லிக்கும் வகையில் தான் கருத்­துக்­களை முன்­வைத்­தனர். அதற்­கான பூரண வௌி இருந்­தது. கருத்துச் சுதந்­தி­ரங்­களை நாம் மட்­டுப்­ப­டுத்­த­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான பணிகள் இடை­வௌியில் இருக்­கின்­றன. அவற்றை மேலும் முன்­னெ­டுத்து சரி­யான திசை­யொன்றில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களும் அமைந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டேன். இருப்பினும் உறுப்பினர்கள் பலர் தமது நிலைப்பாடுகளை வௌிப்படையாகவே அரசியலமைப்பு சபையில் முன்வைத்திருந்தார்கள். அதற்கு யாரும் தடைகளை விதிக்கவில்லை. அவ்வாறிருக்கையில் பாராளுமன்றக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்திற்க அமைய எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே அந்த உறுப்பினருக்கான சந்தர்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை. ஆகவே நான் மீண்டும் கூறுகின்றேன் அது தனிப்பட்ட ஒருவரின் முடிவல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.