புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக தென்­னி­லங்கை மக்­களை தவ­றாக வழி­ந­டத்திச் செல்­லா­தீர்கள் என முன் னாள் வெளிவி­வ­கார அமைச்­சரும் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸி­டத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான சம்­பந்தன் நேர­டி­யாக வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் 70ஆவது ஆண்டு நிறை­வை­யொட்டி நடை­பெறும் விசேட விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக பங்­க­ளா­தேஷின் சபா­நா­யகர் கலா­நிதி. ஷெரின் ஷர்மின் சௌத்தி வருகை தந்­துள்ள நிலையில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இலங்­கைக்­கான பங்­க­ளாதேஷ் தூதுவர் ரியாஸ் ஹம்­மி­யத்­துல்லா  தனது இல்­லத்தில் இரவு விருந்­து­ப­சா­ர­மொன்றை ஏற்­பாடு செய்­தி­ருந்தார்.

இந்த விருந்­து­ப­சா­ரத்தில் பங்­கேற்­ப­தற்கு அர­சியல் கட்­சி­க­ளி­னது முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்து கொண்­டி­ருந்­தனர். இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், இரா­ஜங்க அமைச்­சர்­க­ளான ஹர்ஷ டி சில்வா, ஏ.எச்.எம் பௌசி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரிஷாட் பதி­யூர்தீன், முன்னாள் வௌிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் ஒரே மேசையில் அமர்­வ­தற்­கான சந்­தர்ப்பம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது பல்­வேறு விட­யங்கள் குறித்து பேச்­சுக்கள் எழுந்­தன. அதில், எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், முன்னாள் வௌிவி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரி­ஸி­டத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை வௌியா­கி­யுள்­ளது. அந்த அறிக்கை தொடர்­பாக ஏன் நீங்­களும்(ஜி.எல்.பீரிஸ்) மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சி­யி­னரும் தெற்­கிலும் ஏனைய பிர­சே­தங்­க­ளிலும் தவ­றான கருத்­துக்­களைக் கூறு­கின்­றீர்கள். தாங்­களே(ஜி.எல்.பீரிஸ்) அதி­கா­ரங்கள் பகிர்வு தொடர்­பான வரை­பொன்றை முன்னர் நீலன் திருச்­செல்­வத்­துடன் இணைந்து மேற்­கொண்­டி­ருந்­தீர்கள். அதி­லுள்ள விட­யங்­களும் இந்த இடைக்­கால அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. நாட்டை பிரிக்­கப்­போ­வ­தா­கவோ அல்­லது பௌத்த மதத்­திற்கு எதி­ரா­ன­தா­கவோ எந்­த­வொரு முன்­மொ­ழி­விலும் குறிப்­பி­டப்­பி­ட­வில்லை. ஆகவே எந்த அடிப்­ப­டையில் தாங்கள்(ஜீ.எல்) இத்­த­கைய பிர­சா­ரங்­களை முன்­னெ­டுக்­கின்­றீர்கள். தயவு செய்து இடைக்­கால அறிக்­கையை முழு­மை­யாக ஆராய்ந்து உங்­களின்(ஜி.எல்) கருத்­துக்­களை முன்­வை­யுங்கள் என்று சற்றே கடு­மை­யான தொனியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இடைக்கால அறிக்கையில் உள்ள விடயங்கள் உட்பட புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் எதிர்கால செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு கூட்டு எதிர்க்கட்சி முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/25281