‘வடக்கு – கிழக்கு இணைக்­கப்­பட்ட கூட்­டாட்­சிக் (சமஷ்டி) கோட்­பாட்­டுக்கு இணங்க அதி­யுச்ச அள­வில் அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்ட தீர்­வையே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும். கூட்­ட­மைப்பு அதில் உறு­தி­யாக இருக்­கின்­றது’ இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும்இ எதிர்க்கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டம் அம்­பா­றை­யில் நேற்று நடை­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையே தற்­போது வெளி­வந்­துள்­ளது. இது இறுதி அறிக்கை அல்ல. இடைக்­கால அறிக்கை தொடர்­பில் நாடா­ளு­மன்­றில் அடுத்த மாதம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. அதன் பின்­னர் அர­ச­மைப்பு வரை­யப்­ப­டும். அது­வும் அறிக்­கை­யாக வெளி­வந்து அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யான நாடா­ளு­மன்­றில் விவா­திக்­கப்­ப­டும்.
பின்­னர் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் அர­ச­மைப்­பின் இறுதி அறிக்கை நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும்.

அது மக்­க­ளின் ஒப்­பு­த­லைப் பெறு­வ­தற்கு பொது வாக்­கெ­டுப்­புக்­கும் விடப்­பட்டு வெற்­றி­பெற வேண்­டும். அதன் பின்­னரே புதிய அர­ச­மைப்­புக்கு நடை­மு­றைக்கு வரும். தற்­போது இடைக்­கால அறிக்­கை­யின் பின்­னி­ணைப்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நிலைப்­பாடு வெளி­வந்­துள்­ளது.

ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தொரு கருத்­தொ­ரு­மிப்பை அடை­வ­தற்­கான நலன்­க­ருதி இடைக்­கால அறிக்­கை­யில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள முதன்­மைக் கோட்­பா­டு­களை இரண்டு முதன்­மைக் கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும்இ சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­தாக இருக்­கு­மா­யின்இ அவற்­று­ட­னான இணக்­கத்­தைப் பரி­சீ­லிப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ராக உள்­ளது.

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப் பணி­கள் முழு­மை­யாக வெற்­றி­பெ­ற­வேண்­டும் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யில் ஒற்­றை­யாட்­சிக்கு முடிவு கட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்கை இனி­மேல் ஒரு­மித்த நாடு. எனவேஇ பிரி­ப­டாத மற்­றும் பிரிக்க முடி­யாத நாட்­டுக்­குள் கூட்­டாட்­சிக் கோட்­பா­டு­க­ளுக்கு இணங்க அதி­யுச்ச அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­ட­வேண்­டும்.

தமிழ்­பே­சும் மக்­க­ளின் தாய­க­மான வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் மீளி­ணைக்­கப்­பட்டு ஒரு மாகா­ண­மாக அமை­தல் வேண்­டும். இந்த நிலைப்­பாட்­டில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறு­தி­யாக இருக்­கின்­றது. இவ்­வா­றா­ன­தொரு தீர்­வையே கூட்­ட­மைப்பு ஏற்­றுக் கொள்­ளும் – என்­றார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வர் மாவை.சோ.சேனா­தி­ராசா தலை­மை­யில் அம்­பாறை மாவட்­டத்­தின் கல்­முனை வாடி­வீட்டு விடு­தி­யில் அமைந்­துள்ள ஜெயா மண்­ட­பத்­தில் கூட்­டம் நடை­பெற்­றது.

இந்­தக் கூட்­டத்­தில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்­சி­ச­பைத் தேர்­தல் மற்­றும் மாகாண சபைத் தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது தொடர்­பி­லும் பேசப்­பட்­டுள்­ளது.