ஊடக அறிக்கை

பாராளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக்கொள்ளப்பட இருக்கின்ற, பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிநடத்தல் குழுவின் உறுப்பினர்களாகிய திரு. இரா. சம்பந்தன் மற்றும்  திரு எம். ஏ . சுமந்திரன் ஆகியோரின் கையொப்பத்துடன் கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்  இரா. சம்பந்தன் அவர்களினால் நேரடியாக கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து   மறு  தினமே (ஆகஸ்ட் 30, 2017) குறித்த ஆவணமானது அரசியல் யாப்பு வழிநடத்தல் குழு செயலகத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

 

குறித்த ஆவணம் கையளிக்கப்பட்ட  நேர காலம்  தொடர்பில் வெளிவரும் மாறுபட்ட நிலைமைகளை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த ஊடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

 

எம். ஏ. சுமந்திரன்

ஊடக பேச்சாளர்

தமிழ் தேசிய கூட்டமைப்பு