முதன்மைக் கொள்­கையில் நீங்கள் உறு­தி­யாக இருக்­கின்­றீர்கள் உங்­களை சந்­திப்­பதில் நான் பெரு­மை­ய­டை­கின்றேன் என தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ் எதிர்க்­கட்­சித்­த­லைவர் சம்­பந்­த­னி­டத்தில் தெரி­வித்­துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்­ஸுக்கும் இடையில்  நேற்று வெள்­ளிக்­கி­ழமை இலங்­கைக்­கான  அமெ­ரிக்க தூதுவர் அத்துல் கேசாப்பின் இல்­லத்தில் காலை உண­வுடன் சந்­திப்­பொன்று நடை­பெற்­றி­ருந்தது.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லை­வரும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை கைலாகு கொடுத்து வர­வேற்ற தெற்கு மத்­திய ஆசியப் பிராந்­தி­யத்­துக்­கான அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தின் பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ்,

நீங்கள் உங்­க­ளு­டைய முதன்மைக் கொள்­கையில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்கள். அது மிகப்­பெரும் சக்­தி­யாகும். அவ்­வாறு முதன்மைக் கொள்­கையில் உறு­தி­யாக இருக்கும் ஒரு­வரை எனது வாழ்­நாளில் நேரில் சந்­திக்க கிடைத்­த­மையை இட்டு பெரு­மை­ய­டை­கின்றேன் என்று குறிப்­பிட்­டுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது.

இதே­வேளை பதில் உதவிச் செய­லாளர் அலிஸ் வெல்ஸ், சிறு­பான்மை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உற­வுகள் குறித்தும் கவனம் செலுத்தும் வகையில் எதிர்க்­க­ட­சித்­த­லை­வ­ரி­டத்தில் வினாக்­களை எழுப்­பி­யி­ருந்தார்.

அச்­ச­ம­யத்தில் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இடை­யி­லான உற­வு­களை கட்­ட­மைப்­பத்தில் அதி­க­ளவு அக்­கறை செலுத்­தி­யுள்­ள­தோடு படிப்­ப­டி­யாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் எதிர்க்­கட்­சித்­த­லைவர் பதிலளித்துள்ளார்.

அத்துடன் பதில் உதவிச் செயலாளர் அலிஸ் வெல்ஸ் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து மிகநுணுக்கமாக தகவல்களை கேட்டறிந்து கொண்டதாகவும் மேலும் தெரியவருகின்றது.

 

http://www.virakesari.lk/article/23886