புதிய அர­ச­மைப்­புத் தொடர் பில் பொது வாக்­கெ­டுப்பு நடத்து வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முதல் தட­வை­யாக இணங்­கி­யுள்­ளது. அத்­து­டன், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­க­ளில் ஈடு­ப­டும் வழி ந­டத் தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை செப்­ரெம்­பர் முதல் வாரத்­தில் அர­ச­மைப்பு நிர்­ணய சபை (நாடா­ளு­மன் றில்) முன்­வைக்­கப்­ப­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பி­டம் அரச தலை­வர் மைத்­தி­ரி­ பால சிறி­சேன நேற்று உறு­தி ய­ளித்­தார்.

அனைத்­துக் கட்­சித் தலை­வர் க­ளுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடை­யில் நேற்­றி­ரவு 9.30 மணி­யி­லி­ருந்து சுமார் ஒரு மணி நேரம் சந்­திப்பு நடை பெற்­றது.

மனோ வெளிநடப்பு

சந்­திப்­பின் ஆரம்­பத்­தில் உள் ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் சட்­ட­ வ­ரைவு தொடர்­பில் பேசப் பட்­டுள்­ளது. இதன்­போது அமைச்­சர் மனோ கணே­சன் முரண்­பட்­டுக் கொண்டு கூட் டத்­தி­லி­ருந்து வெளி­யே­றிச் சென்­றுள்­ளார். இத­னைத் தொடர்ந்து 20ஆவது திருத் தச் சட்­ட­வ­ரைவு தொடர்­பில் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

ஆயுள் காலம் முடி­வ­டை­யும் மாகாண சபை­களை இரண்டு ஆண்­டு­கள் வரை­யில் பதவி நீடிப்­புச் செய்­வது ஏற்­றுக் கொள்ள முடி­யாதது என்று தெரி­விக்­கப் பட்­டுள்­ளது. மாகாண சபைக் கான எல்லை நிர்­ண­யம் மேற் கொள்­வ­தற்கு ஆகக் கூடி­யது 6 மாதங்­கள் வரை­யில் தேர்­தலை ஒத்­திப்­போ­டு­வதை ஏற்­றுக் கொள்­ள­லாம் என்று கட்­சி­கள் இணக்­கம் தெரி­வித்­துள்­ளன. அத்­து­டன் கட்­சி­கள் ஏற்­க­னவே இணங்­கி­ய­தைப் போன்று 20ஆம் திருத்­தச் சட்­ட­வ­ரைவு மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதன்­பின்­னர் புதிய அர­ச­மைப்­புத் தேக்க நிலை தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், இடித்­து­ரைத்­துள்­ளார். இத­னைத் தொடர்ந்து 20ஆம் திருத்­தச் சட்­ட­வ­ரைவு உள்­ளிட்ட ஏனைய விட­யங்­களை நிறுத்­திய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­தில் ஏற்­பட்­டுள்ள முட்­டுக் கட்டை தொடர்­பில் விரி­வாக – நீண்ட நேரம் ஆராய்ந்­துள்­ளார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்­கை­யு­டன் இணைப்­பா­கச் சேர்ப்­ப­தற்கு தமது கருத்­துக்­கள் அடங்­கிய அறிக்­கையை வழங்­கு­வ­தா­கக் கூறி­யி­ருந்­த­னர். இது­வ­ரை­யில் வழங்­க­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஏன் காலத்தை இழுத்­த­டிக்­கின்­றீர்­கள்? என்று தனது கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரி­டம் அரச தலை­வர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். எதிர்­வ­ரும் வெள்­ளிக்­கி­ழமை தாம் அத­னைச் சமர்­பிக்­கின்­றோம் என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் பதில் வழங்­கி­யுள்­ள­னர். இதன்­போது குறுக்­கிட்ட தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, இந்த வாரத்­துக்­கான வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டம் வியா­ழக் கிழமை வரை­யி­லேயே நடை­பெ­றும். அதற்கு முன்­னர் அத­னைச் சமர்­பிக்க வேண்­டும் என்று கோரி­யுள்­ளார்.

இதற்கு இணங்­கிய சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர், நாளை மறு­தி­னம் வியா­ழக்­கி­ழமை தமது அறிக்­கையை வழி­ந­டத்­தல் குழு­வுக்­குச் சமர்­பிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ள­னர். வழி­ந­டத்­தல் குழு­வுக்கு அவர்­கள் அறிக்கை சமர்­பித்­த­தும் அதனை ஆராய்ந்து ஒரு வாரத்­தி­னுள்­ளேயே. இடைக்­கால அறிக்­கையை நாடா­ளு­மன்­றத்­துக்கு சமர்­பிப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் சம்­பந்­த­மான பேச்­சுக்­க­ளின் போது நிறைய விட­யங்­களை மனம்­விட்­டுப் பேசி­யுள்­ளார். அதி­கா­ரப் பகிர்வு எல்லா ஆட்­சிக் காலத்­தி­லும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட விட­யம் என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

நாட்­டைப் பிரிக்­கப் போகின்­றார்­கள் என்ற பிழை­யான பரப்­புரை முன்­னெ­டுக்­கப்­பட்­டுச் செல்­கின்­றது. சிங்­கள மக்­கள் மத்­தி­யில் உண்­மையை எடுத்­து­ரைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று அரச தலை­வர் இதன்­போது குறிப்­பிட்­டுள்­ளார். இந்­தச் சந்­தர்­பத்­தில் குறுக்­கீடு செய்த அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, இந்­தப் பரப்­புரை நட­வ­டிக்­கையை ஊடக அமைச்­சர் என்ற ரீதி­யில் தன்­னால் செய்ய முடி­யும் என்று கூறி­யுள்­ளார்.

மக்­கள் மத்­தி­யில் உண்­மை­யைத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். அத­னைச் செய்­யா­மல், பொது­வாக்­கெ­டுப்­புக்­குச் சென்று இந்த முயற்­சி­யில் முட்டி மோதி தோற்க முடி­யாது என்­றும் அரச தலை­வர் குறிப்­பிட்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/21620.html