இலங்கை அர­சின் அரசி யல் போக்கு திசை­மா­றி ­வ­ரும் நிலை­யில் இனி­யும் பார்த்­துக்­கொண்­டி­ரா­மல் உலக நாடு­கள் தலை­யி­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருக் கிறது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

”தமிழ் மக்­க­ளின் காணி­க­ளில் இரா­ணு­வம் தொடர்ந்­தும் குடி யி­ருப்­பது நல்­லி­ணக்­கத்­துக் குச் சாத­க­மான சமிக்ஞை இல்லை. மக்­கள் பொறுமை இழந்­து­விட்­டார்­கள். உலக நாடு­கள் இனி­யும் பார்த்­துக் கொண்­டி­ரா­மல் தலை­யிட வேண்­டும்” என்று ஐக்­கிய நாடு ­க­ள் சபையின் பொதுச் செயலா ளர்இ ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­ யா­ளர் மற்­றும் வெளி­நா­டு­க ளின் தூது­வர்­க­ளுக்­குத் தான் எழு­திய கடிதத்­தில் கூட்­ட மைப்­பின் தலை­வர் இரா. சம் பந்­தன் தெரிவித்­துள்­ளார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கேப்­பா­பி­லவு மக்­கள் தமது காணி­களை இரா­ணு­வத்­தின் பிடி­யி­லி­ருந்து விடு­விக்­கு­மாறு கோரி 170 நாள்­கள் வீதி­யி­லி ருந்து தொடர் போராட்­டம் நடத்தி வரு­கின்­ற­னர். இந்­தக் காணி விடு­விப்­புத் தொடர் பில் இரா.சம்­பந்­தன்இ அரச தலை­வ­ரு­டன் நேர­டி­யா­கப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தார். அதன் பின்­பும் காணி விடு­விக் கப்­ப­டா­த­தைத் தொடர்ந்து அரச தலை­வர்இ பாது­காப்பு அமைச்­சின் செய­லர் ஆகி­யோ­ருக்­குக் கடி­தங்­களை அனுப்பி வைத்­தி­ருந்­தார். அவற்­றுக்­கும் உரிய பதில்­கள் கிடைக் கவில்லை.

கடந்த 11ஆம் திகதி அரச தலை­வ­ருக்­கும்இ பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ருக்­கும் மிகக் காட்­ட­மான வார்த்தை களைப் பயன்­ப­டுத்தி மீண்­டும் கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார். தேவைப்­பட்­டால் கேப்­பாப்­பி­லவு காணி விடு­விப்­புத் தொடர்­பில் கூட்­டம் நடத்­து­மா­றும் கேட்­டி­ருந்­தார். ஆனால் எது­வும் நடக்­க­வில்லை.

இதற்­கி­டையே தற்­போ­தைய அர­சி­யல் நில­வ­ரம் குறித் துப் பேசு­வ­தற்­காக அரச தலை­வ­ரைச் சந்­திப்­ப­தற்கு நேரம் ஒதுக்­கித் தரு­மா­றும் இரா.சம்­பந்­தன் அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வி­டம் கோரி­யி­ருந்­தார். இரண்டு வாரங்­க­ளுக்கு மேலா­கி­யும் அதற்­கும் பதில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை.

எல்­லா­வற்­றுக்­கும் மேலாக புதிய அர­ச­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­க­ளும் பெரும்­பான்­மைக் கட்­சி­கள் இரண்­டா­லும் திட்­ட­மிட்டே பின்­தள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இவற்­றை­யெல்­லாம் அடுத்தே உலக நாடு­கள் தலை­யிட வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளார் இரா. சம்­பந்­தன்.

http://newuthayan.com/story/19773.html