ரவி கரு­ணா­நா­யக்க துணிச்­ச­லாக செயற்­பட்­ட­மை­யை­யிட்டு அவ­ருக்கு தனது பாராட்­டுக்களை தெரி­வித்­துக்­கொள்­வ­தாக சபையில் தெரி­வித்த எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்பந்தன் அவரின் செயற்­பாட்­டினை முன்­மா­தி­ரி­யாக கொண்டு எதிர்­கா­லத்தில் பலர் இவ்­வா­றான முடிவை எடுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கின்றேன்  என்றும் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னா­மச்­செய்­வ­தாக அறி­வித்­ததன் பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கருத்­துக்­களை முன்­வைத்தார். அதன் பின்னர் எதிர்க்­கட்­சித்­த­லைவர் கருத்­துக்­களை முன்­வைத்து உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

தனது ஒரு­ம­னி­த­னு­டைய அடிப்­படை உரி­மை­களின் பிர­காரம் குற்­ற­வா­ளி­யாக நிரூ­பிக்­கப்­ப­டாத வரையில் அவர்  நிர­ப­ராதி என்றே கூறப்­ப­டு­கின்­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இன்று(நேற்று) இரா­ஜி­னாம  செய்­தி­ருக்­கின்றார். அவர் எந்­த­வொரு நீதி­மன்­றத்­தி­னாலும்  தற்­போது வரையில் குற்­ற­ம­ழைத்­தவர் என்று தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை.

ஆகவே அவர் குற்­ற­மி­ழைக்­கா­தவர் என்று கூறு­வ­தற்கு உரித்­து­டை­யவர். ரவி கரு­ணா­நா­யக்க துணிச்­ச­லாக செயற்­பட்­ட­மை­யை­யிட்டு நான் பாராட்­டுக்­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

இந்த நாட்டின் நல­னையும் நல்­லாட்­சி­யி­னையும் கருத்­திற்­கொண்டு ரவி கரு­ணா­நா­யக்க தீர்­மனம் எடுத்து முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்­டுள்ளார். கடந்த காலத்தில் காணப்­பட்ட ஆட்சி முறைமை மாறு­பட்­ட­தாக இருக்­கின்­றது. அக்­கா­லத்தில் சில மோச­டிகள், துஷ்­பி­ர­யோ­கங்கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

அக்­கா­லத்தில் பத­வி­களில் இருந்­த­வர்கள் இவ்­வா­றான செயற்­பாட்­டினை முன்னெடுக்கவில்லை. ரவி கருணாநாயக்க துணிச்சலாக முடிவெடுத்து செயற்பட்டிருக்கின்றார். அவரை  முன்னுதாரணமாக கொண்ட பலர் எதிர்காலத்தில் இவ்வாறான முடிவெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.

 

http://www.virakesari.lk/article/23010