தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. வன்­மு­றை­கள் முன்­னரை விடத் தற்­போது ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். பருத்­தித்­துறை திக்­கம் கலா­சார மண்­ட­பத்­தில் பிர­தேச இளை­யோ­ரு­ட­னான சந்­திப்பு நேற்று இடம்­பெற்­றது.

அதில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன், மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான சிவ­யோ­கன், ச.சுகிர்­தன் ஆகி­யோ­ரும் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர். அதில் சுமந்­தி­ரன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலுந் தெரி­வித்­த­தா­வது,
யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் இருந்­த­தை­விட ஒரு படி அதி­க­ரித்­துள்­ளன. பொலி­ஸார் மீது நேற்று வாள்­வெட்டு நடத்­தப்­பட்­டுள்­ளது. துப்­பாக்­கிச் சூடு­கள் உயி­ரி­ழப்­புக்­கள் என்­பன வன்­மு­றை­கள் அதி­க­ரித்த தன்­மை­யைக் காட்­டு­கின்­றன. தென்­ப­கு­தி­யில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே யாழ்ப்­பா­ணத்­தில் இவ்­வாறு வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் அவ­ச­ரப்­பட்ட கருத்து வெளிப்­பா­டு­கள் இத­னு­டன் தொடர்­பு­ப­டு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தில் வன்­மு­றை­கள் அதி­க­ரித்­துள்­ளன என்று மகிந்த கூறு­கி­றார். யாழ்ப்­பா­ணத்து வன்­மு­றை­கள் தொடர்­பில் அவர் தீவி­ர­மான போக்­கைக் கொண்­டுள்­ளார் என்­பது அவ­ரது கருத்­துக்­க­ளின் ஊடா­கப் புலப்­ப­டு­கி­றது – என்­றார்.

இது­த­விர, பருத்­தித்­துறை துன்­னா­லை­யில் மணல் கடத்­தி­ய­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் இளை­ஞன் துப்­பாக்­கிச் சூட்­டில் கொல்­லப்­பட்­டி­ருந்­தார். அந்த இளை­ஞ­னின் வீட்­டுக்­குச் சென்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் குடும்­பத்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­னார்.

அங்கு கூடிய இளை­ஞர்­கள், “பொலி­ஸா­ரால் தமக்­குப் பாது­காப்­பில்லை. வெளியே நட­மாட முடி­ய­வில்லை. குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்­திக் கைது செய்­கின்­ற­னர்” என்று சுமந்­தி­ர­னி­டம் முறை­யிட்­ட­னர்.

அது தொடர்­பில் கலந்­து­ரை­யா­டி­ய­பின்­னர், சட்­டம் ஒழுங்கு அமைச்­ச­ரு­டன் பொலி­ஸா­ர­யும் இங்­குள் பொது இடத்­துக்கு அழைத்து இங்­குள்ள மக்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டல் ஒன்றை நடத்தி சுமு­க­மான நிலையை ஏற்­ப­டுத்­து­வது தொடர்­பில் அடுத்த வாரம் நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

 

http://newuthayan.com/story/15296.html