“காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டும் விசா­ர­ணை­க­ளில் கடத்­தி­ய­வர் யார்? என்­பது கண்­ட­றி­யப்­பட்­டால், அரசு (சட்­ட­மா­அ­தி­பர்) அவர்­க­ளுக்கு எதி­ராக பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் குற்­ற­மா­கும் சட்­டத்­தின் கீழ் வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யும்” இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ. சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

“காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் முற்­று­மு­ழு­தான தீர்­வைப் பெற்­றுக் கொடுக்க முடி­யும் என்று சொல்ல முடி­யாது. ஆனால் இந்த அலு­வ­ல­கத்­தில் மிகச் சிறந்த பொறி­முறை இருக்­கின்­றது.

வேறு பல நாடு­க­ளில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யத்­துக்கு என்ன நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்தே எமது நாட்­டில் இந்த அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. ஆணைக்­கு­ழுக்­கள் போன்­றது அல்ல இந்த அலு­வ­ல­கம்.

காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் வழக்­குத் தாக்­கல் செய்ய முடி­யாது. ஆனால் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தலை குற்­ற­மாக்­கும் சட்­ட­வ­ரைவு நிறை­வேற்­றப் ­பட்­டால், அதன் பின்பு காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் இலங்­கை­யில் குற்­ற­மா­கும்.

காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கத்­தால் மேற்­கொள்­ளப்­ப­டும் விசா­ர­ணை­க­ளில் கடத்­தி­ய­வர் யார்? என்­பது கண்­ட­றி­யப்­பட்­டால், அரசு (சட்­ட­மா­அ­தி­பர்) அவர்­க­ளுக்கு எதி­ராக பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் குற்­ற­மா­கும் சட்­டத்­தின் கீழ் வழக்­குத் தாக்­கல் செய்­வார்” என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் மேலும் தெரி­வித்­தார்.

 

Source: http://newuthayan.com/story/14893.html#prettyPhoto