இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிடின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் மூலமும் இந்த பிரச்சினைக்கு நிலையான தீர்வை காணமுடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“இலங்கை மீதான இந்தியாவின் அக்கறை பொருளாதாரம் மற்றும் மூலோபாய நலன்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. மாறாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் பாரிய பொறுப்புள்ளது.

ஒரு காத்திரமான, கணிசமான அதிகாரப்பகிர்வானது, மக்களுக்கு சுயாட்சி உணர்வையும், நாட்டுடன் இணைந்திருக்கும் உணர்வையும், நாடு தம்முடன் இணைந்திருக்கிறது என்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

எவ்வாறாயினும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை செய்யப்பட்டிருக்காவிடின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Source:  http://www.tamilwin.com/politics/01/153600?ref=home-feed