அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களை விசேடமாக சந்திப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசியலமைப்பு குறித்து விளக்கமளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கை வெளிவந்ததன் பின்னர், நாட்டிலுள்ள மக்களை பல்வேறு மட்டங்களிலும் சந்தித்து விளக்கமளிக்கவுள்ளோம்.

இதில் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள அனைத்து மதத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம்.

அவ்வாறு எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்கும்போது பௌத்த பீடாதிபதிளையும் சந்திப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.