வடக்கு, கிழக்கில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அந்த பகுதியில் உள்ள கல்வி கற்ற, உரிய தகுதியுடன் உள்ளவர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

வடக்கிழக்கில் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு தென் பகுதியில் உள்ளவர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.

யுத்த காலங்களிலும் கல்வி கற்று, தகுதியுடையவர்கள் அங்கு காணப்படுகின்ற போதும் அவர்கள் உள்வாங்கப்பட வில்லை.

இதனால் அங்கு தொடர்ந்தும் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. அத்துடன், அந்த பகுதியில் உள்ள தகுதியுடைவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாது இந்த மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.