இலங்கை பேரழிவு மிக்க நிலைமைகளைச் சந்தித்துள்ளது என எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று(5) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கிறது.

இந்த தீர்மானத்துக்கு கட்டுப்பட்டு அதை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. அதை எவ்வாறு உரியவகையில் நிறைவேற்றுவது என்பது பற்றி சிந்தித்து நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

எமது நாடு பேரழிவுமிக்க நிலைமைகளை சந்தித்துள்ளது. நாம் அந்த நிலைமையில் இருந்து மீள வேண்டும். இந்த நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டாலோ அன்றி மறுப்புத் தெரிவித்தாலோ எமது நாட்டின் எதிர்காலத்துக்கு பாதிப்பாகவே அமையும் என்றார்.

http://www.tamilwin.com/parliment/01/148232?ref=home-feed