ஊகங்­க­ளும், சந்­தே­கங்­க­ளும் நீதி­யை­யும் நிவா­ர­ணத்­தை­யும் பெற்­றுத் தர­மாட்­டாது. அவற்றை விசா­ர­ணை­ க­ளின் ஊடாக நிரூ­பிக்­க­வேண்­டும். அதற்­குக் காணா­மற்­போ­னோர் அலு­வ­ல­கம் விரை­வில் நிறு­வப்­பட வேண்­டும். அத­னைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்­றது. இவ்­வாறு அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

‘‘காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் உண்­மை­யி­லேயே உயி­ரு­டன் இருக்­கின்­றார்­களா அல்­லது உயி­ரி­ழந்­து­விட்­டார்­களா என்­ப­தைத் தேடிப் பார்க்­க­வேண்­டும். எனக்­குத் தெரிந்த வரை­யில் அப்­படி யாரை­யும் முகாம்­க­ளில் மறைத்து வைக்­க­வில்லை.

அப்­போது ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யி­லி­ருந்த இரா­ணு­வத்­தின் பழக்­கத்­திற்­கேற்ப அவர்­கள் அழைத்­துச் செல்­லப்­பட்­டுக் கொலை செய்­யப்­பட்­டி­ருக்­க­லாம். அது எனக்­குத் தெரி­யாது. ஆனால் அப்­போது அவர்­க­ளைப் பொறுப் பேற்­றி­ருந்­தால் யாரை­யும் கொலை செய்­வார்­களே அன்றி, இவ்­வ­ளவு வரு­டங்­க­ளா­கத் தடுத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

காணாமற்போனோர் தொடர்பில் ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறுகின்றனர். சந்திரிகா அம்மையார் சொல்லும் ஊகம் சிலவேளைகளில் சரியாக இருக்கலாம். எமது பலத்த சந்தேகமும் அதுவே. ஆனால் ஊகமும் – சந்தேகமும் நீதியையும் – நிவாரணத்தையும் பெற்றுத் தரமாட்டாது. சரியான விசாரணை நடத்தப்படவேண்டும். இதற்குக் காணாமற்போனோர் அலுவலகம் நிறுவப்படவேண்டும்.

அந்த அலுவலகம் நிறுவப்பட்டால் ஒவ்வொரு விடயமாக ஆராயப்படும். இந்த அலுவலகம் நிறுவப்படுவதற்கு கூட்டமைப்பு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது – என்றார்.

 

http://uthayandaily.com/story/4900.html