தந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வே இந்த நாட்டுக்குப் பொருத்தமானது என்று அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் நினைவு தினத்தையொட்டி, ‘தந்தை செல்வா நினைவுப் பேருரை’ நேற்று (25) மாலை கொழும்பு, பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ராஜித சேனாரத்ன ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வு’ என்ற தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

“தந்தை செல்வா சமஷ்டியைத் தீர்வாக முன்வைத்தார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

இதனால் வேறு தெரிவுகள் இல்லாமல் தமிழீழக் கோரிக்கையை அவர் தெரிவு செய்தார். இதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம்.

இன்னமும் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்தான்.

மாறி மாறி மூன்றாம் தர – கீழ்த்தரமான அரசியல் செய்தனர். அவர்கள் மட்டுமல்ல, பாரம்பரியமான இடதுசாரிக் கட்சிகளும் கூட ஆரம்பத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காகப் பேசினாலும், பின்னர் இனத்துவேச அரசியல் ஈடுபட்டனர்.

இதற்கு நான் பொறுப்பில்லை என்று சொல்ல முடியாது. நானும் பொறுப்பாளிதான். இவை நடக்கும்போது நான் மாணவன்.

நான் என்னுடைய அரசியலை விஜயகுமார ரணதுங்கவின் தலைமையில்தான் தொடங்கினேன்.

தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்தேன். இதற்காக மக்கள் விடுதலை முன்னணியினர் என் மீது தாக்குதல் நடத்தினர்.

இன்றும் எனது உடம்பில் இரண்டு குண்டுச் சிதறல்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்.

அவை தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுத்தமைக்காகக் கிடைத்தது. இதனை நான் கௌரவப் பரிசாகவே கருதுகின்றேன்.

தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தால் சிங்கள மக்களின் வாக்குகள் குறைந்து விடும் என்று சொல்கின்றார்கள்.

நான் களுத்துறை மாவட்டத்தில் 2004 ஆம் ஆண்டு போருக்கு எதிராகக் குரல் கொடுத்தேன்.

70 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. தமிழ் மக்களின் உரிமைக்காக அதன் பின்னர் குரல் கொடுத்தேன். 2010ஆம் ஆண்டு ஒரு இலட்சமாக எனக்குரிய வாக்குகள் அதிகரித்தன.

அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தேன். ஒரு இலட்சத்து 40 ஆயிரமாக வாக்குகள் அதிகரித்தன.

இதனைச் சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் சமஷ்டியை வேண்டும் என்று கோருவதால், அது சிங்கள மக்கள் மத்தியில் தவறான பரப்புரையாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சமஷ்டி என்பது பிரிவினை என்று சிங்கள மக்கள் அஞ்சுகின்றார்கள். இது தொடர்பில் சிங்கள மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதனைச் செய்ய வேண்டும்.

அதிகாரங்கள் என்பது மையத்தில் இருக்கக்கூடாது. சமஷ்டி இந்த நாட்டில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்குத் தேவை. தீர்வைக் காணும் நடவடிக்கைகள் மந்த கதியில் இருக்கின்றமை உண்மைதான்.

இப்போது சரியான தீர்வைக் காண வேண்டும். இரண்டு தேசங்கள் இந்த நாட்டை ஒரு தாய் நாடாக ஏற்பதற்கு, இரண்டு தேசங்களுக்கும் அதிகாரங்கப் பகிரப்பட வேண்டும்.

அதிகாரங்கள் பகிரப்பட்டால்தான் இரண்டு தேசங்களும் சிநேகபூர்வமாக இந்த நாட்டில் வாழலாம் என்று தந்தை செல்வநாயகம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அது சரியானது. தந்தை செல்வா கூறிய சமஷ்டி முறைமைதான் எமது நாட்டுக்குப் பொருத்தமானது” – எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

Source : http://www.tamilwin.com/politics/01/143884?ref=home-feed

 

POWER SHARING IN SRI LANKA

(S.J.V. Chelvanayagam Memorial lecture – delivered by Dr. Rajitha Senaratne, Minister of Health, Nutrition and Indigenous Medicine on 26th April 2017

 

When we were political cubs, we knew of Chelvanayagam as one who was the “father” figure of Tamil Nationalism. He was one Tamil political leader who was affectionately called “Thanthai” – meaning ‘Father’ – Chelva. Samuel James Velupillai Chelvanayagam dominated Tamil politics in the first 03 decades in post independent Ceylon.

 

I would say that Chelvanayagam was fortunate. He did not live to see the agony of the Tamil people and of Sri Lanka that got dragged into a long brutal war. He was fortunate that he was not there to shoulder the heavy responsibility that his most favoured political recruit, R. Sampanthan, is burdened with now as leader of TNA.

 

Chelvanayagam was a man of principles. He never compromised on his convictions and principles. He differed with leaders like G.G. Ponnambalama Snr. in the All Ceylon Tamil Congress (ACTC) and C. Suntheralingam on the issue of disfranchising the Indian origin Tamil labour. He stood by their rights consistently, as Prof. Ratnajeevan Hoole had recently confirmed.

 

Like both Mr. Sampanthan and Mr. Sumanthiran today, Chelvanayagam’s conviction that Tamil people need to be treated as equals in the island of Ceylon made him give up a very lucrative legal profession. This was a political position he was determined to work towards. He became a full time politician on his convictions.

 

It was the issue of the rights of Plantation Tamils that led to his departure from ACTC in 1950 to form the Ilankai Thamil Arasu Katchchi (ITAK). ITAK is popularly known as the “Federal Party” in English. A “federal State” was the fundamental Tamil political demand that Chelvanayagam stood for. How Chelvanayagam defined federalism was written in the resolution adopted at the first national convention of ITAK in 1951 in Trincomalee.

 

“The I.T.A.K recommends to the Tamil-speaking people the feasibility and desirability of establishing the autonomous Tamil linguistic state within the framework of a Federal Union of Ceylon, as the rational and natural culmination of centuries of close association between these two nations it is their common motherland and with a view to promoting and maintaining national goodwill and close co-operation with the Sinhalese people.”

 

There’s nothing about a “separate State”. Nothing about an “Eelam”. It is about living together in a single country; a “federal Union of Ceylon”.

 

What is “federalism”? Federalism is the most democratic form of power sharing within a single united country. It allows people in different regions to take care of their day to day responsibilities including their cultural life, while acting together as a single Nation State.

 

Chelvanayagam was a man born for peace. He was ever ready to sit and talk through issues, and to negotiate.

 

He proved his willingness to be flexible, as long as it did not hurt the dignity of the Tamil people, when he signed the Bandaranayake-Chelvanayagam Pact in 1957. It was far less than federalism. It was for Regional Councils. Chelvanayagam dropped his idea of a merged North-East federal government for Tamil people in accepting Regional Councils.

Regional Councils were clusters of 22 administrative districts then in Ceylon. All local government body members within a region were to elect Regional Councillors.

 

Certainly, Chelvanayagam went a long way to settle the issue with dignity. Having very badly being let down in 1957, he was once again willing to engage with Dudley Senanayake in 1965 to sign the Dudley-Chelvanayagam Pact.

 

Instead of Regional Councils, the compromise in 1965 was to “establish District Councils in Ceylon vested with powers over subjects to be mutually agreed upon between the two leaders”. The two main “Left” political parties, Samasamaja and Communist parties also played a racist role in 1968 to undermine the D-C Pact.

 

The First Republican Constitution in 1972 was also a bad let down for the Tamil people. This compelled Chelvanayagam to consider the option of a Separate State.

 

After 30 years in active Tamil politics from 1944, after he resigned his KKS parliamentary seat in 1972 as a protest against the ’72 Constitution, the Coalition government postponed the due by-election for 02 years and finally held it in 1975 February. Chelvanayagam polled over 72% at this by election. This was the highest ever percentage a candidate polled. He declared to the Tamil people, that this was a mandate for a “separate Tamil Eelam”:

 

“I wish to announce to my people and to the country that I consider the verdict at this election as a mandate that the Tamil Eelam nation should exercise the sovereignty already vested in the Tamil people and become free.” 

 

So, to cut short a long history of promises, negotiations, agreements, abrogation of pacts and a brutal war, we still remain without a decent, workable, power sharing system to allow peaceful and productive living in this country.

 

Who is to be blamed? Both major political parties and the two traditional “Left” parties have to be held responsible for this catastrophe. That does not leave me out. I am also part of mainstream politics in the South.

 

In the 80’s, we were in a different political formation and we sacrificed many lives in Kurunegala, Moneragala, Anuradhapura, Badulla, Kalutara, Galle, Hambantota and Matara – all Sinhala local leaders who stood for power sharing within Provincial Councils. Vijaya Kumaratunge was the popular political leader to have lost his life over Provincial Councils. Thanks to the JVP, I still carry shrapnel in my nape as proof of our commitment to have provincial councils established. I suffered this not because I raised my voice on behalf of my own community, but for the rights of the Tamil people. I consider this an honour.

 

I have always stood for the rights of the Tamil people. And the more I stood for this, the more my vote bank in the South increased. That is because we have stayed consistent in our position, and the people trust us because of this.

 

We have failed despite all those sacrifices to convince the Sinhala South to agree to power sharing. My question is, “where did we go wrong”? I firmly believe, we in the South have approached the issue of “Federalism” in a very wrong way. We were only supporting “federalism” as a demand by Tamil people. Therefore the Sinhala South was made to understand that “federalism” is a path to a “separate” State. We have to talk of “federalism” as a democratic model for national development.

 

We should have asked, “Why only for Tamils? We in the South also need federalism”. We need “federalism” because centralised power from the Parliament of 1947 to that of 2017 – for 70 years – have failed to develop the rural Sinhala society. Every Constitution – the Soulbury, the First and the Second Republican Constitutions – have centralised power in Colombo. The poor rural South has been left out. Even my district Kalutara, though within Western Province, is lagging behind the Colombo and Gampaha districts. We have not been telling the South they are poor because political power is centralised in Colombo.

 

According to the Central Bank, in 2012/2013 the per capita income in the Western Province was Rs.16,124. But in the South it was Rs.10,973, in the North Central province it was Rs.9,877 and in Uva it was Rs.9,382. The per capita GDP in the Western Province in 2015 was Rs.771,117 when it was Rs.453,714 in the South, Rs.446,138 in Uva and Rs.392,913 in Sabaragamuwa. This disparity can be seen in all Sinhala rural areas. For 70 years with a centralised power structure, rural society both in Sinhala and Tamil areas have not gained any economic benefit and social development.

 

It is therefore time, I believe, that we change our approach in politics to achieve national development within a stable and a peaceful Nation State. It is time for the South to go with Chelvanayagam’s formula – to have provinces “within the framework of a Federal Union” of Sri Lanka. That, I think, is how we in the South can respect and honour this great democratic, Tamil leader – S.J.V. Chelvanayagam – in post independent Sri Lanka.

Thank you.