நல்லாட்சி அரசாங்கம் 2017ஆம் ஆண்டு எதிர்கொள்ளவுள்ள முதலாவது தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதாகவும், இது இவ்வருடம் நடத்தப்படுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனக் கூறினார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மக்களைத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய கூடிய அவர் விரைவில் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் எனவும் வலியுறுத்தினார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் எனவும், சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரு நாளிலும், சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்களை மற்றொரு நாளில் நடத்தப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

Source : http://newsbeta.ibctamil.com/ta/internal-affairs/First-election-in-2017-will-be-a-referendum

Referendum likely this year

The Minister of Health Rajitha Senarathne said a referendum would be held this year in order to obtain approval for a new Constitution. Accordingly, the yahapalanaya government would face this year (2017) its first election which will be a referendum.

The Minister expressed these views recently at a discussion held in his ministry.

Minister Senarathne said further that after the new Constitution being presented to the Parliament and once it is approved a referendum will be held in order to get it approved by the people as well.

He assured that the drafting of the new Constitution is moving fast with the respective committees being appointed and creating awareness is also in progress.

After holding the referendum the Provincial Council elections and the other local council elections would be held. The Minister also said that it is the wish of the government to hold the Provincial Council elections in one day and the local council elections also to be held in one day.(Ranjan Kasthuri)

– See more at:

http://www.dailymirror.lk/article/Referendum-likely-this-year-127785.html#sthash.Q095e7nm.dpuf