மீதொட்டமுள்ள சம்பவம் தொடர்பிலான அறிக்கை

 

மீதொட்டமுள்ள பிரதேசத்தில் ஏப்ரல் 14ம் திகதி   இடம்பெற்ற  துரதிஸ்ட்ட சம்பவத்தில் உயிரிழந்த குடும்ப உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த சம்பவமானது நூற்றுக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கைகளை பாதித்துள்ளது.இச்சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைகளை மீளக்கட்டியெழுப்புவதற்கான அணைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும், இப்படியான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யவும் வேண்டும் என நான் கோரிக்கை விடுக்கிறேன்.

இந்த இக்கட்டான நிலைமையில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாடுபடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தில் காயமுற்றோருக்காக நான் வேண்டுவதுடன் அவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்கிறேன்.

இந்த துர்ப்பாக்கிய நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்ட முன்வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்.

 

இரா.சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவர் – இலங்கை பாராளுமன்றம்

தலைவர் -தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

 

Statement on Meethotamulla Incident

 

I wish to extend my deepest condolences to the families who have lost their loved ones in the unfortunate incident that occurred at Meethotamulla on 14 April.

This incident has shattered the lives of hundreds of families in the area. I urge the government, to continue to take all steps necessary to restore the lives of the affected people and ensure that such a catastrophe does not recur in the future.

At this time of tragedy, I wish to place my sincere appreciation to all those involved in various ways to provide help to those affected. Moreover, my prayers are also with those who were injured in the incident. I wish them a speedy recovery.

Finally, I would like to appeal to all people to express their solidarity with our brothers and sisters who have been affected in this unfortunate disaster.

 

R . Sampanthan

Leader of the Opposition

Leader of the Tamil National Alliance