தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சினைகள் தீர்க்­கப்­ப­டா­விட்டால் அர­சாங்­கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்­நிலை உரு­வாகும் எனவும் இதனை இந்த அர­சாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்­க்கட்சித் தலை­வரும் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன் தெரி­வித்­துள்ளார்.

ஞானம் அறக்­கட்­டளை நிறு­வ­னத்­தின ரால் வவு­னியாஇ நெடுங்­கேணி பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட சின்ன அடம்பன் இர­ச­பு­ரத்தில் நேற்று 150 வீடு­களை பய­னா­ளி­க­ளி­டத்தில் கைய­ளிக்கும் நிகழ்வில் பிர­தம அதிதியாக கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்இ

நாட்­டி­லுள்ள தேசி­யப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வுகாணப்­பட்டு ஒரு புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்டு அத­னூ­டாக நாங்­களும் சம­மாகஇ ஒற்­று­மை­யாகஇ சுய­ம­ரி­யா­தை­யுடன் வாழ வேண்­டு­மென்று இந்த நாடு சுதந்­திரம் அடைந்த காலம் தொட்டு கோரிக்­கையை முன்­வைத்து வரு­கிறோம். அம்­மு­டிவு இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­ச­னைகள்இ காணிகள் சம்­பந்­த­மான பிரச்­ச­னைகள்இ மக்­களின் மீள்­கு­டி­யேற்றம்இ அர­சியல் கைதிகள் சம்­பந்­த­மான பிரச்­ச­னைகள்இ புனர்­வாழ்வுஇ தொழில் வாய்ப்பு போன்ற பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும்.

புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு தமிழ் மக்கள் ஒரு பெரும் பங்­க­ளிப்பை செய்­தார்கள் தமிழ் பேசும் முஸ்லிம் மக்­களின் பங்­க­ளிப்பும் பாரி­ய­தாக இருந்­தது. ஆனால் அர­சாங்­கத்தின் போக்­கா­னது அவர்­க­ளு­டைய கொள்­கை­களைப் பொறுத்த வரையில்இ அவர்­க­ளு­டைய பேச்­சைப்­பொ­றுத்த வரையில் பழைய அர­சாங்­கத்­திற்கும் புதிய அர­சாங்­கத்­திற்­கு­மி­டையில் ஒரு மாற்­றத்தை காண்­கிறோம். இருந்­தாலும் எமது மக்­க­ளு­டைய பிரச்­ச­னைகள் தீர்க்­கப்­ப­ட­வேண்டும்.

காணாமல் போனோர் சம்­பந்­த­மாக ஒரு முடிவு விரைவில் கிடைக்­க­வேண்டும்இ அர­சாங்கம் துரி­த­மாக செயற்­ப­ட­வேண்டும் என்­பது அத்­தி­ய­வ­சி­ய­மாக இருக்­கி­றது. அது அவர்­களின் கடமை அர­சாங்கம் பதவி ஏற்று இரண்டு வரு­ட­கா­ல­மாகி விட்­டது. மக்­க­ளு­டைய காணிகள் மக்­க­ளுக்கு திருப்பிக் கொடுக்­கப்­பட வேண்டும். இரா­ணுவம் மக்­க­ளு­டைய காணியில் விவ­சாயம் செய்து அதில் வியா­பாரம் செய்து தொழில்­செய்து உழைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். எமது மக்கள் நலன்­புரி நிலை­யங்­க­ளிலும்இ முகாம்­க­ளிலும்இ இன்­னொ­ருவர் வீடு­க­ளிலும்இ அவர்­களின் தயவில் தங்கி வாழ முடி­யாது தவிர்க்­கின்­றார்கள்.

எமது மக்கள் தங்­க­ளு­டைய காணி­க­ளுக்கு திரும்ப வேண்டும். ஓர­ள­வுதான் அரசு மக்­களின் காணி­களை விடு­வித்­தி­ருக்­கி­றது. மன்­னாரில்இ வவு­னி­யாவில்இ கிளி­நொச்­சியில்இ திரு­கோ­ண­ம­லையில்இ மட்­டக்­க­ளப்பில்இ அம்­பா­றையில் கூட காணிகள் விடப்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது. ஆன­ப­டியால் இனியும் தாம­திக்­காமல் அர­சாங்கம் மக்­களின் காணி­களை விடு­விக்க வேண்டும். அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டால் அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டு­வார்கள் என சொல்­லப்­ப­டு­கின்­றது.

அச்­சட்­டமும் நீக்­கப்­ப­ட­வில்லை. அவர்கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. இந் நிலமை தொடர முடி­யாது. புதிய அர­சாங்கம் இரண்டு வரு­ட­மாக ஆட்­சியில் இருக்­கின்­றது. எமது மக்கள் இன்னும் பொறு­மை­யாக இருக்க முடி­யாது. நீதியை கேட்டு காணாமல் போனோர் சம்­பந்­த­மாக முடிவைக் கேட்டு காணிகள் மற்றும் கைதிகள் விடு­விக்­கப்­ப­ட­வேண்டும் என கேட்டும் போரா­டு­கி­றார்கள். ஆயி­ரக்­க­ணக்­கான பட்­ட­தா­ரிகள் வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு காரணம் எமது இளைஞர்களுக்கு போதிய அளவிற்கு வேலைவாய்ப்பு இருக்கவில்லை. இப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். இவ்விதமான புறக்கணிப்பு தொடர முடியாது. இந்நிலமை தொடருமாக விருந்தால் இவ் அரசாங்கத்தை மக்கள் வெறுக்க வேண்டிய நிலமை ஏற்படும் இதனை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

 

http://www.virakesari.lk/article/18946