அர­சி­ய­ல­மைப்பு வழி­ந­டத்தல் குழுவில் இது­ வ­ரையில் கொள்­கை­ய­ளவில் இணக்கம் ஏற்­பட்ட விட­யங்­களை உள்­ள­டக்­கிய இடைக்­கால அறிக்கையினை வெளியி­டு­வதில் எவ்­வி­த­மான கால தாம­தங்­களும் அவ­சி­ய­மில்லை. இந்த விட யத்தில் அனைத்துக் கட்­சி­களும்

ஒன்­று­பட வேண்­டு­ம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார்.

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­களின் தற்­போ­தைய நிலை­மைகள் தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தாது,

அண்­மையில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­டத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யா­னது நிறை­வேற்று அதி­கா­ரத்தை நீக்­கு­வதில் முழ­மை­யான விருப்­பத்தைக் காட்­டி­யி­ருக்­க­வில்லை. அதே­போன்று புதிய அர­சி­ய­ல­மைப்பின் மீது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­தற்கும் இணங்­காத வெளிப்­பாட்­டி­னையே கொண்­டி­ருந்­தது.

மறு­பக்­கத்தில் தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்டு வரு­வது குறித்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­ப­டாது விட்­டாலும் கூட அனைத்துக் கட்­சி­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விடங்கள் காணப்­ப­டு­கின்­றன.

அதே­நேரம் அதி­கா­ரப்­ப­கிர்வு விடத்­திலும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு இடையில் இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டி­ரு­கின்­றன. சம­யங்கள் உட்­பட இனங்­க­ளுக்­கான தனித்­து­வங்­களில் அனைத்து தரப்­புக்­களுக்கிடையில் ஏகோ­பித்த நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன.

மேலும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­காக நிய­மிக்­கப்­பட்ட உப­கு­ழுக்­களின் அறிக்­கை­களும் வழி­ந­டத்தில் குழு­வி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலையில் கடந்த டிசம்பர் மாதம் வழி­ந­டத்தல் குழு, இடைக்­கால அறிக்கையினை சமர்ப்­பிப்­பதற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த போதும் அனைத்து கட்­சி­களின் ஏகோ­பித்த இணக்­கப்­பாடு காணப்­ப­டா­மையின் கார­ண­மாக அச்­செ­யற்­பாடும் கைவி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் செயற்­றிட்­டத்­திற்கு எதி­ராக தவ­றான கருத்­துக்கள் மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆகவே இடைக்­கால வரைபை சமாப்­பிப்­பதில் தொடர்ந்தும் கால தாம­தங்­களைச் செய்­வ­தனைச் தவிர்க்க வேண்டும்.

தற்­போ­தைய நிலையில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளையும் கொள்­கை­ய­ளவில் இணங்­கிய விட­யங்­க­ளையும் உள்­ள­டக்­கிய இடைக்­கால வரை­பினை வௌியி­டு­வதே பொருத்­த­மா­ன­தாகும்.

குறிப்பாக இறுதி தீர்மானம் எடுக்காத போதும் அதிகாரப்பகிர்வு விடங்கள் உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை உள்ளடக்கிய வரைபினை வெளியிடுவதே பொருத்தமானதாகும். இதற்காக அனைத்து தரப்புக்களும் முற்போக்க சிந்தித்து கைகோர்க்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

Source: Virakesari 04.04.2017