ஒரு மாதகால தொடர் போராட்டத்தின் மூலம் தமது சொந்த நிலங்களை விமானப்படையினரிடம் இருந்து மீட்டு மீள்குடியேறி வாழ்ந்துவரும் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களை இன்றையதினம் (31/03/2017) யாழ் மாவட்ட பாராளுமனர் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டார்.

இன்றையதினம் முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் முல்லைத்தீவில் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை சந்திப்பதற்காக முல்லைத்தீவுக்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர் இந்த மக்களிடமும் சென்று அவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மீள்குடியேறிய பின்னர் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் இந்த மக்களுக்கான நிரந்தர வீடுத்திட்டம் உள்ளிட்ட  அனைத்து அபிவிருத்தி விடயங்கள் தொடர்பிலும் உரியவர்களிடம் பேசி பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் தெரிவித்தார்.அத்தோடு இந்த மக்கள் போராட்டம் நடாத்திய காலத்தில் தான் நோய்வாய்ப் பட்டிருந்த்ததாகவும் அதனால் அந்த நேரத்தில் வருகைதர முடியவில்லை என்பதனையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற   உறுப்பினர் மாவை சேனாதிராஜாவுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மற்றும் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த  உறுப்பினர் குலநாயகம் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Source : http://www.virakesari.lk/article/18553