மார்ச் 24, 2017,

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/L 1 பிரேரணை தொடர்பான ஊடக அறிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பானது, இலங்கையில் நல்லிணக்கம் , பொறுப்புக்கூறல், மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கும் முகமாக 2015ம் ஆண்டின் 30/1 பிரேரணையை முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படுவதனை வலியுறுத்தும்  ஐ நா. மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 34/L 1,  பிரேரணையை வரவேற்கிறது.

மேலும், இந்த 34/L 1 பிரேரணையில், இலங்கை அரசாங்கத்திற்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும், 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஐ.நா.மனித உரிமை பேரவையில், 30/1 பிரேரணையின் வெற்றிகரமான அமுலாக்கம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கொடுத்துள்ள கால வரையறையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது வரவேற்கிறது.

எனவே, இந்த பிரேரணைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கிய தனது வாக்குறுதிகளை மதிக்க வேண்டும் எனவும், இந்த பிரேரணைகளைளின் உள்ளடக்கங்களை அவற்றில் உள்ளவாறே நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் அரசாங்கமானது காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற்போனோரின் குடும்பங்களின் அங்கலாய்ப்புகள், மற்றும் புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் போன்ற விடயங்களில் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்க விரும்புகிறோம்.

தமிழ் மக்கள் தமது பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டார்கள், எனவே இந்த விடயங்கள் தொடர்பிலான அவர்களது இடர்களுக்கும், வேதனைகளுக்கும் கூடிய விரைவிலே ஒரு முடிவு காணப்படவேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகிறோம்.

மேற்குறித்த விடயங்களை அடைந்து கொள்வதில் சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஒத்தாசைகளையும் நாம் வரவேற்கிறோம். தமிழ் பேசும் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது தொடர்ந்தும், இலங்கையில் நிலைமாற்று நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான ஐ.நா.வின் பரிந்துரை மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின் செயலாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவதிலும் கண்காணிப்பதிலும் ஆக்கபூர்வமாக செயற்படும் என்பதனையும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம்.

இந்த பிரேரணையின் அமுலாக்கத்தின் பலன்களை பாதிக்கப்பட்ட மக்கள் பெற்றுக் கொள்வதனை உறுதி செய்யும்படிக்கான அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் ஐக்கிய நாடுகள், மனித உரிமை பேரவை, மற்றும் சர்வதேச சமூகம் என்பன  எடுக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுக்கொள்ள விரும்புகிறோம்.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு 

 

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

 

 

(24 March, 2017)

Statement on the Adoption of Resolution 34/L 1, at the UN Human Rights Council

The Tamil National Alliance (TNA) welcomes the adoption of UNHRC resolution 34/L 1 which reaffirms the full implementation of resolution 30/1 of 2015, promoting reconciliation, accountability and human rights in Sri Lanka.

The TNA also welcomes the fact that resolution 34/L 1, gives specific time frames for the Government of Sri Lanka and the Office of the High Commissioner for Human Rights to report on the successful implementation of the 30/1 resolution at the 37th and 40th UNHRC sessions respectively in 2018 and 2019.

We urge the Government of Sri Lanka to honor its commitment with regard to these resolutions and implement the same in letter and spirit. In keeping with its commitments, we also urge the government to sincerely address the issues of land release, the detention of Tamil political prisoners, grievances of the families of missing persons, and the enactment of constitutional reforms.

The Tamil people have reached their limits of tolerance, and urge that their deprivation and suffering on these several issues be brought to an early end.

We welcome the continued engagement and assistance of the international community in achieving the aforesaid. The TNA, as the elected representatives of the Tamil speaking people, reiterates its commitment to closely engage with and monitor the implementation of the UN recommendations and other proposed processes related to reconciliation and transitional justice in Sri Lanka.

The UN and the Human Rights Council and the International Community, we submit, should also take all necessary actions to ensure that the benefits of the implementation of the UN resolution are derived by the people who have been victims.

Tamil National Alliance