அரசியல் அமைப்பு மந்தகதியில் செல்வதாகவும்  தென்னிலங்கை அரசியல் சூழல் அரசியல் தீர்வில் அசமந்த போக்கை தோற்றுவிப்பத்தாகவும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்சத்தில் அதனூடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றலாம் என தான் நம்புவதாகவும் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று நேற்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

குறித்த குழுவை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்ததாக நாடாளுமன்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகள் விடுவிப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் நேற்றைய தினம், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுப்ரமணியம் ஜெய்சங்கரிடம் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த எதிர்கட்சித் தலைவர் இந்த விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
Americal MP With TNA 02

Americal MP With TNA 03