நாட்டின் சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரசியல் தீர்வுத் திட்டம் அமையவேண்டுமென்பதே சகலரதும் நோக்கமாகுமென தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், குறித்த பணிகள் தற்போது நிறைவுபெறும் தருவாயில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் நேற்றுஇடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 60 ஆண்டு காலமாக இடம்பெற்ற அரசியல் சாசன மாற்றத்தில் குறிப்பிடத்தக்களவு மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லையென தெரிவித்த சுமந்திரன், தற்போதைய அரசியல் தீர்வுத் திட்டமானது தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்வதாக அமையவேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

globaltamilnews.net/archives/17381