புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – TNA

sumanthiran

புதிய அரசியல் சாசனத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கு நேர்ந்த கதி புதிய அரசியல் சாசனத்திற்கு நேர்ந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ள அவர் சிங்கள மக்கள் மீது திணிக்கப்படும் ஒர் அரசியல் சாசனமாக புதிய அரசியல் சாசனம் அமைந்துவிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

இனியொரு ஆயுதப் போராட்டம் நடத்தப்படாது எனவும் வன்முறைக்கு இடமில்லை எனவும் தெரிவித்துள்ள அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக எடுக்கப்பட்டு வரும் முயற்சிகள் வெற்றியடையும் வரையில் அனைவரும் பொறுமை காக்க வேண்டுமென  குறிப்பிட்டுள்ளார்.